தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த், தலைமையில் போலீசார் (24.10.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி லாயல் மில் காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வடக்கு திட்டங்குளம் பசும்பொன்நகரை சேர்ந்த பாண்டி மகன் கனகராஜ் (21), இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மாரிகிருஷ்ணன் (20),மற்றும் லாயல் மில் காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சிவா (25), ஆகியோர் என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான கனகராஜ், மாரிகிருஷ்ணன் மற்றும் சிவா ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.