திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (04.07.2020) தச்சநல்லூர் காவல் நிலையம் இ.த.ச பிரிவு 341,294(b),506(ii)& மானூர் காவல் நிலையம் இ.த.ச. பிரிவு 341,392,506(ii) வழக்குகளில் எதிரியான சத்திரம்புதுக்குளம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த அருண் (33) (த/பெ பெருமாள்) என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்கள் மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி அருண் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் 04.07.2020 தேதி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி