திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திருமதி.சாவித்திரி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தென்கலம் விளக்கில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதி இல்லாமல் கரையிருப்பை சேர்ந்த பேச்சிமுத்து 30, தாழையூத்து சேர்ந்த லட்சுமணன் 31 சரள் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.
பின்னர் உதவி ஆய்வாளர் அவர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த இருவரையும் கைது செய்தார். மேலும் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியையும், 3யூனிட் மணலையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.