கரூர் : கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் அழகம்மாள் (80) இவர் நேற்று தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அழகம்மாள் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகம்மாள் திருடன் திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.