திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாதை பிரச்சனை சம்பந்தமாக கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 24 பேர் மீது வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் பிரபு, அன்பரசு, ஜெயபிரகாஷ், இளவரசு, திருநாவுக்கரசு, கவியரசு, கண்ணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள 17 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா