கோவை: கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.செல்வ நாகரத்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது அவுட்டு காய் தயாரிப்பதும் மற்றும் அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றமாகும். துடியலூர் காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது..அதில் தொடர்புடைய 9 பேரை கைது செய்து 14 அவுட்க் காய்களை பறிமுதல் செய்யபட்டுள்ளது.மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இது சம்மந்தமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 7708100100 என்றால் வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர்கள் இரகசியங்கள் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.