கோவை : ஒரு பக்கம் காவல் துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில காவலர்கள் இருக்கின்ற வேலையில் மக்கள் தொண்டே பெரியது என்று பாடுபடும் நல்ல காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்கள் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கொரானா தொற்றுக்கு ஆளாவது மிகவும் வேதனைக்குரியது. அவ்வாறு பாதிக்கப்படும் காவலர்கள், மரணத்தின் விளிம்பிற்கு சென்று வருவதும் உண்டு. அவ்வாறு மரணத்தை வென்று வருபவர்களை, சக காவல் அதிகாரிகள், மலர் கொத்து கொடுத்து, உற்சாகத்துடன் வரவேற்கும் போது, நோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பணியாற்ற முடியும்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. அர. அருளரசு இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து நேற்று (30/09/2020) பணிக்கு திரும்பியவரை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. நரேந்திரன் நாயர் இ.கா.ப., அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அனிதா, திரு.விஜய கார்த்திக்ராஜ் மற்றும் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.லோகநாதன் ஆகியோர்கள் வரவேற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்