கோவை : கோவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் ஆகியோர்களது உத்தரவின்படி வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமை என்றும் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவைகளின் மீது சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தி முறையான தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. என்று கோவை மாநகரில் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இக்குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 158 மனுக்களில் அவற்றில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகிய இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். காவல்துறையின் விசாரணையின் போது 86 புகார்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இரு தரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். 37 மனுக்களில் முறையாக விசாரிக்கப்பட்டு குறைகளுக்கு ஏற்ப இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டவாறு தீர்ப்பு காணப்பட்டது.
நான்கு மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நான்கு மனுக்கள் மீது ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக விசாரணை நிலுவையில் உள்ளது. 27 மனுக்களில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் காவல்துறை விசாரணையின் போது நீதிமன்றம் சென்று தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே காவல் நிலையங்களில் மனுக்கள் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெறும் விதத்தை கண்காணிக்கும் விதமாக பி – 2 ஆர்.எஸ் புறம் காவல் நிலையத்திற்கு கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள், முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று சென்று மக்கள் விசாரணை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தார் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் காவல்துறையினரின் விசாரணை குறித்து கேட்டறிந்தார் மேலும் அங்கிருந்த காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு மனுக்கள் குறைதீர்க்கும் முகாமின் நோக்கம் குறித்தும் விசாரணை முறை குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்