கோவை: கோவை சூலூர் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவு அங்குள்ள பாப்பம்பட்டி பிரிவில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் .அதில் 1100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது செய்ய பட்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் குமார் ( வயது 27 ) மற்றொருவர் மதுரை அனுப்பானடி முனி சாலையைச் சேர்ந்த பிரபாகரன் ( வயது 19) என்பதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 1100 கிராம் கஞ்சா 2 பைக் செல்போன் கீபோர்டு எடை மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது