கோவை: கோவை கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அற்புத மணி ( வயது 56 ) இவர் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் காந்திபுரம் 2 -வது வீதியில் உள்ள ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி இவரது கையில் இருந்த மனி பர்சை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். உடனே அவர் சத்தம் போட்டார் .அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த ஆசாமி துரத்திப் பிடித்து காட்டூர் காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னையன் குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் ( வயது 36 ) என்பது தெரியவந்தது .இவனிடம் இருந்து மனிபர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.