தூத்துக்குடி: தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக டிஎஸ்பி கலைக்கதிரவனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் சென்று சோதனை நடத்தினர்.அப்போது வள்ளுவர் நகரில் வெள்ளத்துரை (40), ராமர் ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 650 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ராமரை கைது செய்த போலீசார், வெள்ளத்துரையை தேடி வருகின்றனர்.