திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான ராதாபுரம் வட்டம், பணகுடி, வடக்கு தெருவைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் சவரிவளன் 20 மற்றும் ராதாபுரம் வட்டம், துலுக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த எல்கான்தாசன் 28 ஆகிய இருவரும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால்
குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜார்ஜ் சகாய சாந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,21.08.2021 இன்று குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.