கோவை : கோவை மாநகரம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதியில் அமைந்துள்ள கோவை மாநகரின் பிரசித்தி பெற்ற பிரதான அருள்மிகு கோனியம்மன் கோயில் அமைந்துள்ளது. மேற்படி கோயில் கடந்த (13/5/2023),ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் யாருக்கும் தெரியாமல் கோயில் வளாகத்தினுள் நுழைந்து மேற்குப் பக்கம் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கோனியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உதவி ஆய்வாளர் திரு.சிவனு, தலைமையில் தனிப்படை நியமிக்கப்பட்டு குற்றவாளி சேகர் என்ற சதீஷ் (32), கவுண்டர் வீதி ஐயம்பாளையம் திண்டுக்கல் மாவட்டம் என்பவரை (27/5/2023) ஆம் தேதி கைது செய்யப்பட்டது. மேற்படி குற்றவாளி சதீஷிடமிருந்து வழக்கு சொத்து கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்