குமரி: கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலைய எல்ககைக்குட்பட்ட விரிவிளை பகுதியை சேர்ந்த உஷா என்பவரது பூட்டியிருந்த வீட்டில் 26.10.2022 அன்று மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து உஷா நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (29.10.2022) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த வினீஷ் 23, அனீஷ் 20. மற்றும் விபின் 27. என்பவர்களை நித்திரவிளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 1/2 பவுன் தங்க நகையை மீட்டனர். பின்னர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் குற்றவாளிகளை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.