தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் கொலை வழக்கு குற்றவாளி காதர் மொய்தீன் -க்கு பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி அவர்களின் உத்தரவின்படி, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்ததன்பேரில் அதிராம்பட்டினம் காவல் நிலைய புலன் விசாரணை அதிகாரி தஞ்சாவூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஓய்வு திரு.செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சக்கரவர்த்தி, ஆகியோர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்