திருநெல்வேலி: திருநெல்வேலி வட்டம், கட்டுடையார்குடியிருப்பு, அம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற மொங்கான் 29, நல்லதுரை என்ற பாண்டி(22), முத்துபட்டன் என்பவரின் மகன் சங்கிலிபூவத்தான் 20, உதயகுமார் என்பவரின் மகன் சதீஷ்ராஜா 21 , குமாரசாமி என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் 25 , வேலாயுதம்
என்பவரின் மகன் குருசச்சின் 24 , ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து, காவல் ஆய்வாளர், திரு. பத்மநாப பிள்ளை அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 09.08.2021 இன்று குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.