இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி 54. முருகேசன் 55. ஆகிய இருவரும் சேர்ந்து முன் விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து ராதாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி திரு. குமரகுரு அவர்கள் சுடலையாண்டி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த ராதாபுரம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.