திருநெல்வேலி: திருநெல்வேலிவட்டம்இ ராஜவல்லிபுரம்இ அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டன் என்பவரின் மகன் கந்தன் 19 ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் முருகன் என்ற முருககுட்டி 18 ராஜவல்லிபுரம்
பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த துரை என்பவரது மகன் சுரேஷ் என்ற சூசை 18 ராஜவல்லிபுரம் செக்கடி தெருவைச் சேர்ந்த முத்தையா என்ற ராஜ் என்பவரின் மகன் விஜய் 18 மற்றும் சுடலை கோவில் தெரு பேச்சிமுத்து என்பவரது மகன் சங்கர் என்ற கோமதிசங்கர்18 ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால் மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. அர்ச்சனா அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.