திண்டுக்கல்: பழனியருகே பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும், இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குற்றவாளி சங்கர் பழனி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது பத்மநாபனை மட்டுமே கொலை செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குற்றவாளி சங்கரை காவலில் எடுத்து விசாரணை செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா