திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் முன்னீர்பள்ளம் புதுகிராமம், பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகன் முருகன் 24, தென்திருபுவனம் பகுதியை சேர்ந்த காளி என்ற கருப்பசாமி என்பவரின் மகன் பேச்சுத்துரை 22, தருவை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன்
முத்து 20, கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த அல்லல்காத்தான் என்பவரின் மகன் அருணாச்சலம் 21, முருகன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி 20 மற்றும் மாரிமுத்து என்பவரின் மகன் சங்கரலிங்கம் என்ற சங்கர் 22ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 16.07.2021 இன்று எதிரிகள் ஆறு நபர்களை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்
களக்காடு மற்றும் திசையன்விளை காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் எதிரியான, திசையன்விளை, அப்புவிலை நடுத்தெரு, பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் ஸ்ரீ முருகன்(30) கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திவந்ததால்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு காவல் ஆய்வாளர் திரு.ஜோசப் ஜெட்சன், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்