திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி வட்டம், மறுகால் குறிச்சி பகுதியைச் சேர்ந்த வானு என்ற வானுமாமலை 21, ஆறுமுகம் 23 இவரது சகோதரர் இசக்கி பாண்டி 21 ஆகியோர் அடிதடி, கொலைமுயற்சி மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படிகுற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் ஆய்வாளர், திரு.காளியப்பன், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.