சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்தில், வாகனத்தில் வந்தவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு தரப்பை சேர்ந்த ஒருவரை கத்தியால் குத்தியதில் சப்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடம் வந்த போலீஸார் விசாரணை செய்ததில் கொலையானவர் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டணத்தை சேர்ந்த விக்னேஷ் என்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் வாங்குவதற்காக
காரைக்குடி வந்தவர் என்றும் தெரியவந்தது. அவருடன் வந்த சண்முகதுரை என்பவரிம் விசாரித்து வரும் நிலையில்,
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொள்கின்றனர். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி