குமரி: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து இன்று அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா அஞ்சுகிராமம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமூலநகர் மற்றும் நிலப்பாறை ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.