திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பேருந்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனடிப்படையில் கொரோனா காலத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது, அவர்கள் இன்று வள்ளியூர் பேருந்து நிலையத்தில் சென்று, பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களிடமும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.