தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களை நேரில் சந்தித்து,முகக் கவசம் அணிவது,தனிமனித இடைவெளியே கடைபிடிப்பது,
கொரோனா தடுப்பு ஊசியை கட்டாயம் செலுத்தி கொள்வது குறித்தும்,18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால் ஏற்படும் சட்டநடவடிக்கை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.