திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்களின் அறிவுரையின்படி வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கூட்டத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.