ஈரோடு: பெருந்துறை அருகே கூத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35).இவர் பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்திருமணம் செய்து கொள்ளாமல் இவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. சீலம்பட்டியை சேர்ந்த தனபால் என்பவர் மோகன்ராஜிடம் கேட்டுள்ளார். மோகன்ராஜ் ஆதரவாக வழக்கறிஞர்கள் ரவி, அவரின் மகன் சூர்யா ஆகியோர் தனபாலை கண்டித்து அனுப்பியுள்ளனர். ரவிக்கும், தனபாலுக்கு கடந்த 27 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி கத்தியை எடுத்து தனபாலை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனபால் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் மோகன்ராஜ், ரவி, சூர்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.