மதுரை : மேற்காசிய போரால் சிலிண்டர் கேஸ் தட்டுப்பாடு இந்திய அளவில் நீடித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரோலித்து வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சில இடங்களில் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை டீ காபி போன்றவைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
முள்ளிபள்ளம் கிராமத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தேநீர் தற்போது 12 ரூபாய்க்கும் 7 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வடை தற்போது 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது மேலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் மூலம் டீக்கடைகள் இயங்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மண்ணெண்ணெயும் சரிவர கிடைக்காத நிலையில் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் உணவகங்களை மூடக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவதுடன் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆகையால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கி தடையின்றி சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமப் பகுதியில் உள்ள சிறிய வணிக நிறுவனங்களுக்கு தடை இன்றி கேஸ் சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















