தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவு விடுதிகள், மருந்தகங்கள் திறந்திருந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டத்தை பறக்கும் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு. இந்த பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் காய்கறி சந்தைகள் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்க கூடிய மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்கும் வகையில் பறக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.