கரூர்: கடையநல்லூரை சேர்ந்தவர் குருசாமி இவரது மகன் நம்பிராஜன்(32).கூலி தொழிலாளி. இவர் குருவிகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்த சிறுமியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.