திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். திரு.C. சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்து திருநெல்வேலி சரக காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கூடங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் நிறைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா இ.கா.ப அவர்கள் உடனிருந்தார்.