கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ. சுந்தரவதனம் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் நீக்குதல் மற்றும் முறைப்படுத்துதல் பற்றிய சோதனை. கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை தொழிலாளர் உதவி ஆணையர் திரு.ராமராஜ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சித்ராதேவி மற்றும் முதல் நிலை பெண் காவலர் திருமதி. சாரதாமற்றும் மாவட்ட குழந்தை நல உறுப்பினர்கள் அகியோர் இணைந்து. (15.12.2022), உப்பிடமங்கலத்தில் இயங்கி வரும் 1.A Tex 2. சின்ன சேங்கலில் இயங்கி வரும் தமிழ்நாடு சேம்பர் மற்றும் 3. உப்பிடமங்கலத்தில் இயங்கி வரும் ஏர்வில் டெக்ஸ்லும் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.