திருச்சி : உத்திரபிரதேசத்தில் 50 குழந்தைகளை கடத்தி 4 மாநிலங்களில் விற்பனை செய்த கும்பலை துணிவுடன் கைது செய்த தமிழரான வாரணாசி குற்றப்பிரிவு ஆணையர் (ACP) த.சரவணன் IPS அவர்களுக்கு பாராட்டுக்கள் திருச்சி மாவட்டம், துறையூர் மதுராபுரியை சேர்ந்தவரும் முன்னாள் துறையூர் சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி இந்திராகாந்தி தங்கமணி அவர்களின் மகனுமான த.சரவணன்I.P.S. உத்திரபிரதேசத்தில் இந்திய பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களின் தொகுதியான வாரணாசியில் குற்றப்பிரிவு துணை ஆணையராக (ACP) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வாரணாசி பேலூரில் சாலையோரத்தில் குடியிருப்பவர் ஒருவரின் குழந்தை காணாமல் போன புகாரில் இவரது தலைமையிலான படை
உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இக்குழு விசாரணை நடத்தியது. இதன் முடிவில் குழந்தைகளை கடத்தி 4 மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பலை மடக்கி பிடித்தனர். இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி