திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் மத்தியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் கோட்டை குளம் உள்ளது .. இங்கு ஜிலேபி கெண்டை,, கட்லா போன்ற ஏராளமான மீன்கள் உள்ளது. மீன்வளத் துறை சார்பாக குளம் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றது. யாரேனும் குளத்தில் விஷத்தைக் கலந்து விட்டார்களா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் மீன்கள் செத்து மிதக்கின்றன வா என தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா