தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையன அள்ளி பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன் (55). இவருக்கு திருமணமாகவில்லை BE பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வந்த (27). வயதுள்ள இளம் பெண்ணுடன் இன்பசேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது இன்பசேகரன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இன்பசேகரன் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்பசேகரனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் இன்பசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி.இஆப., அவர்களுக்கு பரிந்துரை செய்ததன் படி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதற்கான ஆணை நகலை சேலம் மத்திய சிறையில் இன்பசேகரனிடம் வழங்கப்பட்டது.