திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா, விற்பவர்களின் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி ..திரு.சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ 15லட்சம் மதிப்புள்ள 1000 குட்கா மற்றும் பான் மசாலா பிடிபட்டது. இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குட்கா, பான் மசாலா மற்றும் போதைப் பொருள் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா மற்றும் பான் மசாலா விற்பனைசெய்யும் நபர்கள் மீது குண்டாஸ் பாயும்.