திண்டுக்கல்: திண்டுக்கல் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல்லில் பர்னிச்சர் கடை அதிபர் மணிகண்டன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னையா, பிரசன்ன குமார், பாலகிருஷ்ணன், கருப்பையா ஆகிய 4 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா