திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கண்ணன்(27), குஜிலியம்பாறை வட்டம் ஆர்.பி.பள்ளபட்டியை சேர்ந்த ராஜ்குமார்(31) ஆகிய 2 பேரும் தொடர்ந்து வழிப்பறி திருட்டு உட்பட பல தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.ரவளிபிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா