திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ தாழையூத்து பூந்தோட்டத்தெருவை சேர்ந்த குமரய்யா என்பவரின் மகன் முருகன் என்ற பேய் முருகன்(30) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால்.
குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு.பத்மநாபபிள்ளை அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.