திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் மகேந்திரன் திருநெல்வேலி வட்டம், கட்டுடையார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேந்திரன் என்ற கட்டையன் 24 என்பவர் அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள்
கவனத்திற்கு வந்ததால் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு.பத்மநாப பிள்ளை அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 12.07.2021 அன்று மகேந்திரன் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சீவலப்பேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கில் பாளையங்கோட்டை வட்டம், சீவலப்பேரி, புதுகாலனி தெருவை சேர்ந்த முண்டசாமி என்பவரின் மகன் செல்லப்பாண்டி (28)
கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,12.07.2021 அன்று மகேந்திரன் செல்லப்பாண்டியை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.