குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.இரா. ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக வடசேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சி பஜாா் ரோடு பகுதியில் நடத்திய சோதனையில், நாகா்கோவில் பொதுபணித்துறை ரோட்டை சேர்ந்த சூசை மரியான் என்பவரது மகன் ஜான் மாா்க்கோணி(54) கிழராமன்புதுரை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரது மகன் சிலுவை புஸ்பராஜ் (54) காரவிளையை சேர்ந்த பிச்சை நாடாா் என்பவரது மகன் அந்தோணி 41.என்பவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா புகையிலையை கடையில் விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் தீவிரமாக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்.