தர்மபுரி : தர்மபுரி மாவட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜயசங்கர் அவர்கள் தலைமையில் போலீசார் குற்றத்தடுப்பு ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1,79,345/-லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 1,79,345/- லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 01). கரண் குமார் 02). விக்ரம் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்