மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அசோக் 21, என்பவர் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று இரவு கங்கைகொண்டான் பகுதியில் தனது பர்சை தவறவிட்டதாகவும் அதில் 700 ரூபாய் பணமும் இரண்டு ATM கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தாகவும் காவல் நிலையம் வந்து தகவல் அளித்தார்.
இந்நிலையில் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து முதல் நிலை காவலர் திரு.ராஜன் அவர்கள் கீழே கிடந்த பர்சை எடுத்து கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்களிடம் ஒப்படைத்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு பர்சை உரிய நபரிடம் ஒப்படைத்தார். பர்சை உடனடியாக மீட்டுக் கொடுத்த முதல் நிலை காவலர் திரு.ராஜன் அவர்களை காவல் ஆய்வாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்