பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உறுதிபடுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு காவல் நிலைய, உதவி ஆய்வாளர் திரு.சரவணகுமார் அவர்கள், (26.03.2023), -ம் தேதி கீழப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம் கலந்துரையாடிய போது கிராம பொதுமக்கள், கோடை காலத்தில் வயல்வெளிகளில், விவசாய வேலைகள் குறைவாக இருக்கும் நிலையில், அதிக நேரம் கடைவீதியில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து, நேரத்தை வீணாக செலவிடுவதாக கூறியுள்ளார்கள். இதனை கேட்ட உதவி ஆய்வாளர் அவருடன் மு.நி.காவலர்கள் திரு.ரமேஷ் மற்றும் திரு.சங்கரபாண்டியன் ஆகியோர்கள் இணைந்து மேற்படி கிராம மக்களின் நேரத்தினை பயனுள்ளதாகவும், ஆக்கபூர்வமாகவும், செலவிடும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கியுள்ளார்.
விளையாட்டு பொருட்களை பெற்றுக்கொண்ட கீழப்புலியூர் ஊர் பொதுமக்கள், மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நன்றியை தெரிவித்ததோடு மாவட்ட காவல்துறையையும் பாராட்டினார்கள். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள கிராம காவல் என்ற திட்டத்தில் தங்கள் கிராமத்தில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணில் தங்களையும் இணைத்துக் கொண்டு காவல்துறைக்கு உங்களது ஆதரவினை தந்து உதவுமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் 100 (அ) 9498100690 என்ற எண்ணினை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தால் அதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் தெரிவித்துள்ளார்.