திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (05.02.2026) நன்னிலம் உட்கோட்டம் , எரவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
















