திருநெல்வேலி: கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை யினர் நலனில் அக்கறை கொண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு முககவசம், கிருமி நாசினி, பாக்கெட் சனிடைசர், நோய் எதிர்ப்புக்தி மாத்திரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு மாவட்ட காவல்துறையினர் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொடியினை வழங்கும் வகையில் சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு பிரதீப்.,IPS மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்களிடம் வழங்கினார்.மேலும் காவலர்கள் தங்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி, முகக் கவசம் கட்டாயம் அணிந்தும்,சமூக இடைவெளியினை பின்பற்றி பணியில் ஈடுபடவேண்டும் எனவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.