திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, சம்பந்தனூரில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்ததாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி.P.ஷீயமலா அவர்கள் அப்பெண்ணை மீட்டு விசாரணை செய்ததில்,
ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் கணவரிடம் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு உறவினர்கள் நன்றி பாராட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்