கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ. சுந்தரவதனம் இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் நீக்குதல் மற்றும் முறைப்படுத்துதல் பற்றிய சோதனை.
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தை தொழிலாளர் உதவி ஆணையர் திரு.ராமராஜ், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சித்ராதேவி மற்றும் முதல் நிலை பெண் காவலர் திருமதி. சாரதா மற்றும் மாவட்ட குழந்தை நல உறுப்பினர்கள் அகியோர் இணைந்து. மண்மங்கலம் மோதி நகரில் இயங்கி வரும் 1.அருண் ஸ்வீட் ஸ்டால் 2. மண்மங்கலம் N.புதூர் சாலையில் இயங்கி வரும் தரணி ஸ்வீட் ஸ்டால் 3. செல்லாண்டி பாளையத்தில் இயங்கி வரும் சரவணன் தேங்காய் மட்டை கம்பெனி மற்றும் 4.உழவர் சந்தையில் இயங்கி வரும் ஐயங்கார் பேக்கரியிலும் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது.