இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.விஜயா அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்கள், ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட சார்பு நீதிபதிகள், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதிகள், நீதித்துறை குற்றவியல் நடுவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதில் காவல் நிலையத்தில் புலன்விசாரணை முடித்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் குற்றவழக்குகளின் தற்போதைய நிலையினை கேட்டறிந்து, விரைவாக சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதரவும், நீண்ட காலம் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்கு சம்பந்தமாக, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிக்கவும் அறிவுறுத்தபட்டது