கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தினால் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் கொரொனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஆக்ஜிஜன் படுக்கை பெறுவதில் சிரமம் இருப்பதை அறிந்த காவல் கண்காணிப்பாளர், டேன்பேக், கெம்பிளாஸ்ட், ஈ.ஜ.டி பாரி நிறுவனங்கள் உதவியுடன் 100 ஆக்ஸிஜன்யுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க தீர்மானித்து, முதல்கட்டமாக கடலூர் காவலர் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 18 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கொரொணா வார்டு அமைக்கப்பட்டது.
இந்த புதிய கொரொணா வார்டை மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு.MRK. பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்கள். காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புதிய கொரோனா வார்டில் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K. பாலசுப்பிரமணியம் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. அபிநவ் IPS, மாவட்ட மருத்துவ பணிகள் குழு இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்பாபு , துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், காவலர் மருத்துவமனை டாக்டர் சாரா செலின்பால், கடலூர் கோட்டாச்சியர் திரு. ஜெகதீஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.













